குறுந்தகவல் மூலம் ரூ.38 லட்சம் மோசடி.! தீவிர வேட்டையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அந்தேரி பகுதியை சோ்ந்த மருந்து நிறுவன தலைமை நிதி அதிகாரி ஒருவருக்கு சம்பவத்தன்று வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த குறுந்தகவலை அனுப்பியவர் தன்னை, நீங்கள் வேலை பார்க்கும் மருந்து நிறுவனத்தின் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குறுந்தகவல் அனுப்பிய எண், என்னுடைய தனிப்பட்ட செல்போன் எண் என்பாதால் அந்த எண்ணை வேறு யாருடனும் பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறுந்தகவல் வந்த எண்ணின் வாட்ஸ்-அப் ப்ரொபைல் படத்தில் மருந்து நிறுவனத்தின் இயக்குனர் படம் இடம்பெற்று இருந்தது. இதனால், தனக்கு குறுந்தகவல் அனுப்புவது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் இயக்குனர் என்று அதிகாரி நினைத்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் என்று தெரிவித்தவர், தான் முக்கிய கூட்டத்தில் இருப்பதாகவும், உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். மேலும், கூட்டத்தில் இருப்பதால் தனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும், கூட்டம் முடிந்த பிறகு தானே போன் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அதிகாரி, இயக்குனர் என்று கூறி குறுந்தகவல் அனுப்பியவர் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு ரூ.38 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் அவருக்கு, மருந்து நிறுவனத்தின் இயக்குனர் புகைப்படத்தை வாட்ஸ்-அப் முகப்பு படமாக வைத்து, அவரை போல பேசி தலைமை நிதி அதிகாரியிடம் ரூ.38 லட்சத்தை பறித்தது தெரியவந்தது. 

அதன் பின்னர், இந்த மோசடி குறித்து தலைமை நிதி அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக நிதி அதிகாரி பணம் அனுப்பிய ஆறு வங்கி கணக்குகளை முடக்கி, மோசடி செய்யப்பட்ட ரூ.27.70 லட்சம் பணம் மீட்கப்பட்டது. மேலும், மீதமுள்ள தொகையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி ஆசாமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near magarastra man 38 lacks fraud in finance officer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->