இரண்டு குடோன்களில் கைவரிசையைக் காட்டிய கும்பல்.! இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி நகரில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடோனின் பூட்டை உடைத்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள பிரபல பிராண்டின் தொலைக்காட்சி பெட்டிகளை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். 

அதேபோன்று, மாங்கோலியில் உள்ள ஒரு குடோனை உடைத்து அங்கிருந்த ரூ.1.38 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், இந்த இரண்டு குடோன்களிலும் திருடியது ஒரே கும்பல் தான் என்றுத் தெரியவந்தது. 

இந்நிலையில் குடோன்களில் கொள்ளை அடித்த இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 51 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதைத்தொடர்ந்து, இந்த கொள்ளையில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharashtra two peoples arrested for steal in two gudons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->