ஸ்டேட் பேங்கில் போலி ஆவணங்களை காட்டி 28 பேர் மோசடி.!  - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலத்தில், போலி ஆவணங்களை செலுத்தி வங்கியில் ரூ.83 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக இருபத்துமூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மஹாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் ஸ்ரீபாக் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை ஒன்றில் கடன் வாங்கிய நபர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 

இதில் சில நபர்கள் போலி ஆவணங்களை சமர்பித்து வங்கியில், கடன்பெற்று சென்றது தெரியவந்தது. இந்த மோசடிக் குறித்து, வங்கி அதிகாரிகள் அலிபாக் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் போலி ஆவணங்கள் பெற்று ரூ.83 லட்சம் வரையில் கடன் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. 

வங்கியில் கடன் பெற்றவர்களில் நான்கு ஆண்டுகளாக திருப்பி செலுத்தாமல் இதுவரை  28 பேர் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை பிடிப்பதற்காக விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra 28 peoples get loan fake documents


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->