மகாராஷ்டிரா || வேன் மோதி பலியான தனியார் நிறுவன ஊழியர்..!  ரூ.30.52 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


வேன் மோதி பலியான தனியார் நிறுவன ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.30.52 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மிராபயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சிங். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி இவர் ஒரு பெண்ணுடன் ஸ்கூட்டரில் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்றபோது,  திடீரென வேன் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதால் இருவரும் படுகாயமடைந்தனர். 

அதன் பின்னர் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், கிருஷ்ணா சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் வாகன உரிமையாளரிடம் இழப்பீடு கேட்டனர். அதற்கு, அவர் மறுப்பு தெரிவித்ததால், மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்தனர்.. 

இந்த வழக்கு நீதிபதி எச்.எம். போஸ்லே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது விபத்தில் பலியான கிருஷ்ணா சிங் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பெற்று வந்ததாகவும், இவரது வருமானத்தை நம்பி தான் அவரது பெற்றோர் இருந்து வந்ததும் உறுதியானது. 

இதனால், வேன் உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 சதவீத வட்டியுடன் ரூ.28 லட்சத்து 98 ஆயிரமும், இறுதி சடங்கு செலவுக்காக ரூ.16 ஆயிரத்து 500-ம், இதர செலவிற்காக ரூ.88 ஆயிரம் என சேர்த்து ரூ.30 லட்சத்து 52 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra private company employee died 30.52 laks compensation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->