மீதியுள்ள 1¼ கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.- மல்லிகார்ஜூன் கார்கே.!
near maharastra public meeting mallikarjune kharke speach
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுmaana ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமையாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அங்கு நான்தெட்டில் ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டு பேசியதாவது:-
"காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்று பாஜக தலைவர்கள் அடிக்கடி கேள்வி கேட்கின்றனர். காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அன்று நாங்கள் அரசியல் அமைப்பை பாதுகாத்ததனால் தான் இன்று நீங்கள் பிரதமராக முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக உறுதி அளித்தது. ஆனால் தற்போது 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் தான் அவர்கள் கொடுத்துள்ளனர். மீதியுள்ள 1¼ கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.
தற்போது மோடி அரசு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவுக்கு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த பத்து திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?. என்று மல்லிகார்ஜுனே கார்கே பேசினார்.
English Summary
near maharastra public meeting mallikarjune kharke speach