மும்பை : ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை.! கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
near mumbai nineth class student sucide for teacher teasing
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் லாத்தூர் அவுசா ரோடு பகுதியை சேர்ந்தவர் பதினான்கு வயது சிறுமி ஷ்ராவனி சஞ்சய். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்ததில், மாணவி கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில், பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் வைத்து தன்னை கிண்டல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, "போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தில் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
near mumbai nineth class student sucide for teacher teasing