நாய் கடித்து ஆறுமாதம் ஆகி நாய் போல் குறைத்த நபர்.!
near odisa dog bit man
ஒடிசா மாநிலத்தில் புவனேசுவரம் அடுத்த கட்டாக், உடய்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்பியூரா. இவர் ஒரு தொழிலாளி. இவரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. ஆனால் இவர் அதற்காக சிகிச்சை ஏதும் பெறவில்லை.
இந்நிலையில், அவர் வீட்டில் இருந்த போது திடீரென நாய் போல் குரைத்துள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாய் கடித்ததும் உடனடியாக அவர் சிகிச்சை பெறாததே இதற்கு காரணம் என்று தெரிவித்தனர். மேலும் நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்பட்டு பின்னர் தொண்டை வறண்டுவிடும். அப்போது அவரது குரல் நாய் குரைப்பது போன்று மாறும் என்றுத் தெரிவித்தனர்.