கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..குழந்தையோடு நடந்தே சென்ற சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையில் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. 

இந்நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, கிராமத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். 

அதன் படி, ஆம்புலன்சில் ஏறுவதற்காக வழியில் இருந்த கர்ப்பிணி பெண்ணும் அவரது உறவினர்களும் நடந்து சென்றுள்ளனர். அப்போது கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென  பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் பிறந்த குழந்தையை  கையில் தூக்கியவாறு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு நடந்தே சென்ற பிறகு அதில் ஏறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கின்றனர். மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near odisa pregnant lady walk 2 km


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->