கடனை திருப்பி தராத நபரை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்..!  - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இரு சக்கர வாகனம் ஒன்றில் இளைஞரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கட்டி இழுத்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் கட்டாக் ஷெல்டர் சக்கா என்ற பகுதியில் இருந்து மிஷன் சாலை வரையில் உள்ள பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துணை காவல் ஆணையாளர் பினாக் மிஷ்ரா தெரிவித்ததாவது,

"அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் உதவி காவல் ஆணையாளர்களையும் விசாரணை செய்யும் படி உடனடியாக உத்தரவிட்டேன். அந்த வகையில், இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு, காவலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உசைன் மற்றும் சோட்டு என்ற இருவரை கைது செய்துள்ளனர். இவர்களது ஸ்கூட்டரில் கயிறால் கட்டப்பட்டு, இழுத்து செல்லப்பட்ட அந்த நபர் ஜெகன்னாத் பெஹேரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ஜெகன்னாத் பெஹேரா இவர்களிடம் கடனாக ரூ.1,500 திருப்பி தர இயலாத நிலையில், கூடுதல் காலஅவகாசம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், இவர்கள் தங்களது ஸ்கூட்டியில் அவரை கயிறால் கட்டியதுடன், அவரது கையில் கத்தியை வைத்து, அனைவரையும் பயமுறுத்துகிறார் என்று காட்டுவதற்காக  மக்களின் முன்னால் இழுத்து சென்றுள்ளனர் என்று துணை காவல் ஆணையாளர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near odisa young man not repay loan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->