போதையில் தள்ளாடும் இளம்பெண்....சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ...! - Seithipunal
Seithipunal


பஞ்சாப்பில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் போதை பொருள் கடத்தல் அதிகமாக காணப்படுகிறது.

பஞ்சாப்பில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில், 6 கிலோ எடை கொண்ட ரூ.30 கோடி மதிப்பிலான "ஹெராயின்" என்ற போதை பொருளை காரில் கடத்திய சம்பவத்தில் முதுநிலை கல்லூரி மாணவி ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெரோஸ்பூர் நகரில் பன்சி கேட் பகுதியருகே, பாலிவுட் பட பாணியில், போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய கார் ஒன்றை துரத்தியபடி, போலீசார் துப்பாக்கியுடன் ஓடிய காட்சிகள் வைரலாகின. இந்த சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

பஞ்சாப்பில் போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமுடன் ஈடுபடுவோம் என ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், தொடர்ந்து போதை பொருள் தொடர்புடைய செய்திகள் வெளிவந்து அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த சூழலில், அமிர்சரஸ் நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் போதையில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி காணப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை எடுத்தவர் இதுகுறித்து தெரிவிக்கும்போது, வீடியோ பதிவு செய்வதற்கு சற்று முன், பரவச நிலையை அடைவதற்காக அந்த இளம்பெண் ஊசி வழியே போதை பொருளை செலுத்தி கொண்டுள்ளார் என தெரிவித்தார். 

இந்த காட்சிகள், பஞ்சாப் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கிடக்கும் அவல நிலையை வெளிப்படுத்துகின்றன. இதுபற்றி கிசான் மஜ்தூர் சங்ராஷ் கமிட்டியை சேர்ந்த சர்வான் சிங் தெரிவிக்கும்போது, நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனை முற்றிலும் ஒழிப்போம் என அரசு தெரிவிக்கிறது.

ஆனால், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே எங்களது கமிட்டியினர் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டின் முன் இன்று போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near punjap young lady drunks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->