புதுச்சேரி : எலி பேஸ்ட்க்கு பலியான மூன்று வயது சிறுமி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுசாரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் மனைவி மேரி ரோஸ்லின். இவர்களுக்கு மூன்று வயதில்  தியா என்ற மகள் உள்ளார். இவர் வழக்கம் போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது, வீட்டில் எலி தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக வைத்திருந்த எலி பேஸ்டை மிட்டாய் என்று நினைத்து தியா தின்றுவிட்டாள். இதனால் சிறிது நேரத்தில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த பெற்றோர்கள் உடனே சிறுமியை மீட்டு ராஜீவ்காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி தியா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சேரி கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near puthuchery three years old girl died for eat rat paste


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->