புதுச்சேரியில் இரண்டு மீனவ குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் பரபரப்பு.!
near puthuchery two families left out of village
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, செங்கேணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. மீனவர் குடும்பத்தில் பிறந்த இவர் சமீபகாலமாக மீன்பிடிக்க செல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே மோதல் நடைபெற்றது.
இந்த மோதல் விவகாரம் தொடர்பாக மீனவ பஞ்சாயத்தாருக்கு தட்சணாமூர்த்தியின் குடும்பத்தினர் மரியாதை கொடுக்காததால், தட்சணாமூர்த்தி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தினர் தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால், ஊரில் இருப்பவர்கள் யாரும் தட்சணாமூர்த்தி குடும்பத்தினரிடம் பேசாமல் தவிர்த்து வந்தனர்.
மேலும், தட்சணாமூர்த்தி அப்பகுதியில் ஆட்டோ ஓட்டவும் முடியாமல், மீன்பிடி தொழிலுக்கும் செல்ல செய்ய முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தட்சணாமூர்த்தி வீட்டின் மீது இரவு நேரத்தில் கல்வீசுதல், மின்சாரம் துண்டிப்பு, ஜே.சி.பி. மூலம் பள்ளம் தோண்டுதல் என்று அடுத்தடுத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் பஞ்சாயத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதன்பிறகும் அப்பகுதி மக்கள் தட்சிணாமூர்த்தி குடும்பத்தினருடன் சுமூக நிலையை தொடரவில்லை.
இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மீனவரின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
near puthuchery two families left out of village