முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - துக்கம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் உள்ளிட்ட காரணங்களால் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின்பு மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

மேலும், இந்த துக்கம் அனுசரிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். மன்மோகன் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven days mourning observed for ex prime minister manmohan singh death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->