ராஜஸ்தானில் சோகம் : நீட் பயிற்சி மாணவி தற்கொலை - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா நகரில், லட்சக்கணக்கான மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து முகாமிட்டு பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

கோடா நகரில் கடந்த 2022-ம் ஆண்டில் பதினைந்து மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் சில மாணவர்கள், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், நேற்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த விடுதி காப்பாளர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் மாணவியின் அறையில் சோதனை செய்தனர்.

ஆனால், அங்கு எதுவும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் போலீசார் அந்த மாணவி குறித்து நடத்திய விசாரணையில், "அவர் பீகார் மாநிலத்தைச்  சேர்ந்த ஷெம்புல் பர்வின் என்பதும் பதினெட்டு வயதுடைய இவர் கோடா நகரில் தங்கி, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. 

மேலும், அந்த மாணவி தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற முடிவதாகவும், விடுதி உணவு பிடிக்கவில்லையென்றும் பெற்றோரிடம் புலம்பி உள்ளார். 
இதனால், பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடாவுக்கு வந்து தங்கி மகளுக்கு வேறு விடுதியை தேடி வந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்" என்று விசாரணையில் தெரிய வந்தது. இது இந்த ஆண்டில் நிகழ்ந்த 5-வது தற்கொலை ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan NEET training student sucide in koda nagar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->