தெலுங்கானா : தடுப்புசுவரில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்த கார் - 2 பேர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், ஓட்டுனர் உட்பட இரண்டு நபர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.
மேலும் உயிரிழந்த இரண்டு பேரும் ஓட்டுனர் பானி குமார் என்றும் அவரது தாயார் கருணா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குமாரின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் மகன் சாய் சனிஷ் உள்ளிட்டோர் பலத்த காயம் அடைந்தனர். ஆனால், மகள் ஜஸ்ரிதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana car accident two peoples died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->