தெலுங்கானா : வணிக வளாகத்தில் தீ விபத்து.! ஆறு பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரில் தேவலோக் என்ற பெயரில் மாபெரும் வணிக வளாகத்தில் உள்ள தளங்களில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்து விட்டு தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வடக்கு மண்டல டிஜிபி சந்தன தீப்தி தெரிவித்ததாவது, ‘‘இந்த தீ விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்பட்டபோது வளாகத்திற்குள் இருந்தனர். 

இருப்பினும் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எங்களால் ஏழு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தெலுங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-"தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 

இந்தக் கட்டிடத்தின் உள்ளே ஒரு அறையில் குறைந்தது 5 அல்லது ஆறு பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரைக்கும் 11 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana six peoples died for fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->