உ. பி : பாதாம் என்று நச்சு பழத்தை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!
near uttar pradesh childrens admitted hospital for eating poisonous fruite
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சுனார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கன்சிராம் அவாஸ் காலனியைச் சேர்ந்த சில குழந்தைகள் நேற்று பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் அருகிலுள்ள எல்ஐசி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, குழந்தைகள் ஜட்ரோபா என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பழத்தை பாதாம் பருப்பு என்று தவறாக நினைத்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதில் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு, குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, குழந்தைகள் மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி முதல்வரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, குழந்தைகளின் உடல்நலம் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
near uttar pradesh childrens admitted hospital for eating poisonous fruite