உ.பி : கான்பூர் அருகே வங்கியில் கொள்ளை : 1.8 கிலோ தங்க நகை கொள்ளை.!
near uttar pradesh one crore gold jewels robbery
கான்பூரில் ஸ்டேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகில் உள்ள காலி இடத்திலிருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு கொள்ளையர்கள் சுரங்கம் தோண்டியுள்ளனர்.
அந்த சுரங்கம் வழியாக வங்கியில் உள்ள நகை மற்றும் பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்றுள்ளனர். அந்த அறையில் இருந்து 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
அந்த நகைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். இதையடுத்து நகை பெட்டகத்தின் அருகில் உள்ள பணப்பெட்டியை அவர்களால் உடைக்க முடியாததால் அதிலுள்ள 32 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் இருபத்தொன்பது பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வங்கிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்று அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், போலீஸ் தரப்பில் இருந்து அந்த பகுதியை நன்றாக ஆராய்ந்து, குறிப்பாக பாதுகாப்பு பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தே கொள்ளையடித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
near uttar pradesh one crore gold jewels robbery