உ.பி யில் பரபரப்பு.! ஆக்கிரப்புகளை அகற்றும் போது திடீரென தீ பிடித்த வீடு - இருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி கிராமத்தில் சட்டவிரோத கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதற்கு அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த பொதுமக்கள் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீ குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். 

அப்போது, திடீரென பொதுமக்களின் வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பிரமீளா தீட்சித் மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் உள்ளிட்ட இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பிரமீளாவின் மகனான சிவம் தீட்சித் தெரிவித்ததாவது, "உள்ளூர்வாசிகளான அசோக் தீட்சித், அனில் தீட்சித் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் சேர்ந்து வீட்டுக்கு தீ வைத்தனர். 

இந்த விபத்தில், நானும், எனது தந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். ஆனால், எனது தாயாரும், சகோதரியும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், ஒவ்வொரு அதிகாரிக்கும் தொடர்பு உள்ளது என்றுத் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh two peoples died for house fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->