குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் கணவர் முகத்தில் ஆசிட் ஊத்திய மனைவி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் கணவர் முகத்தில் மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் தப்பு குப்தா. கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிற்குத் தாமதமாக வந்த குப்தாவை அவரது மனைவி ஏன் லேட்டு? என்ன காரணம்? என்று துருவி துருவி கேள்விக் கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குப்தா மனைவி கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலைத் திறந்து கணவர் முகத்தில் வீசியுள்ளார்.

ஆசிட் வீசியதால் குப்தா வலியில் கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக குப்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் கணவர் முகத்தில் ஆசிட் வீசிய மனைவியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, குடிபழக்கத்திற்கு அடிமையாகி, அதை நிறுத்துமாறு பல முறை கூறியும் கேட்காததால் கணவர் மீது ஆசிட் வீசியதாக குப்தா மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுமட்டுமில்லாமல், தப்பு குப்தாவுக்கு போதை வஸ்துக்களின் பழக்கமும் இருந்ததால், அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருப்பது தெரிவிக்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh wife arrested for acid attack on husband


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->