NEET-PG தேர்வில் '0' மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ படிப்பு சேரலாம்! இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!
NEET PG exam zero scorer also can join medical course
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் கமிட்டி அறிவித்துள்ளது.
அனைத்து விதமான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக 3ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள காலியிடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
NEET PG exam zero scorer also can join medical course