சென்னை ஆல்பர்ட் திரையரங்கம் கேண்டீனில் காலாவதியான உணவுப்பொருட்கள்: லைசென்ஸ் ரத்து செய்து நடவடிக்கை!
Chennai Theatre foods issue
சென்னை கேண்ட்டோனியில் அமைந்துள்ள ஆல்பர்ட் திரையரங்கத்தின் கேண்டீனில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழு பரிசோதனை மேற்கொண்டது.
ஆய்வில், குளிர்பானங்கள், சிப்ஸ் உள்ளிட்ட திண்பண்டங்கள் மற்றும் 100-க்கும் அதிகமான காலாவதியான பாப்கார்ன் டப்பாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திரையரங்கக் கேண்டீன் உரிமையாளரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
மேலும், சென்னையின் முக்கிய மால்கள் மற்றும் திரையரங்கங்களில் உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்டறிய சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Theatre foods issue