CM ஸ்டாலினின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
All Party Meet CM Stalin DMK TVK HC Case
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதைப் பற்றி விவாதிக்க, மார்ச் 5 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் முதல்வர் ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு எட்டுத் தொகுதிகளை இழக்க நேரிடும். இதுகுறித்து விவாதிக்க அணைத்து கட்சி கூட்டம் வரும் 5 ஆம் தேதி நக்க உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த அணைத்து கட்சி கூட்டத்தில், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காத நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உள்பட, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், “எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். எந்த தேர்தலிலும் போட்டியிடாத சில கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது பாரபட்சமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
All Party Meet CM Stalin DMK TVK HC Case