தமிழகம்: தண்டவாளத்தில் கிடந்த 10 கிலோ... பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி!
Podhigai Train Tenkasi
தென்காசி அருகே பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி செயல் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பொதிகை விரைவு ரயிலை மீண்டும் கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் செங்கோட்டைகளில் இருந்து சென்னை வந்த பொதிகை விரைவு ரயில், போகநல்லூர் பகுதியில் சென்ற போது, தண்டவாளம் நடுவே சுமார் 10 கிலோ எடை உள்ள பெரிய கல் திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் இருந்த கல்லை அப்புறப்படுத்தி பெரும் விபத்தை தவிர்த்து உள்ளார்.
தண்டவாளத்தில் பத்து கிலோ எடை கொண்ட இந்த கல்லை வைத்தது யார்? ரயிலை கவிழ்க்க சதி செய்தார்களா? என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் செந்தில்குமார் (55 வயது) ரயிலில் இருந்து தவறி உயிரிழந்துள்ளார்.
மங்களூர்விலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயிலில் ஏற முயன்ற போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.