போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் "ஹெலிகாப்டர் டாக்சி சேவை"..! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. சென்னை உள்ளிட்ட பிற நகரங்களைவிட பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்  சற்று அதிகம்தான். சமீபத்தில் பெய்த கனமழையில் கூட மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் சாலையில் ஒரே இடத்தில் நின்றிருந்ததும் நாம் அனைவரும் அறிந்ததுதான், 

இந்நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் விதமாக "ஹெலிகாப்டர் டாக்சி சேவை" விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர பட உள்ளது.

பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கி, முதல்கட்டமாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹெச்.ஏ.எல். பகுதிக்கு இரண்டு ஹெலிகாப்டர் சேவைகளை துவங்க உள்ளது. 

இந்த சேவை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், சாலைவழி வாகனத்தில் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால், ஹெலிகாப்டர் டாக்சியில் 12 நிமிடத்தில் சென்றுவிடலாம். இந்த டாக்சியில் ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ. 3,250. இதைத் தொடர்ந்து பெங்களூருவின் பல இடங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை விருப்பமுள்ளவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new helicopter taxi service in banglore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->