புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா எப்போது?
new parliament building open date
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா எப்போது?
தற்போதைய இயங்கி வரும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது. அதுமட்டுமல்லாமல் ஐடா வசதியும் குறைவாக உள்ளது. அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து 'சென்டிரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமானப் பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை தாண்டி தற்போது கட்டிடத்துக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி, வருகிற 28-ந் தேதி திறந்து வைப்பார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. அதேசமயம், மோடி அரசின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 30-ந் தேதி திறக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டது. இருப்பினும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா தேதி குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி வரும் இந்த புதிய நாடாளுமன்றத்தில், பிரமாண்டமான மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வெடுக்கும் பகுதி, நூலகம், பல்வேறு குழுக்களின் அறைகள், உணவருந்தும் பகுதிகள், விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
English Summary
new parliament building open date