கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்.!
new scanner photo facility announce for karnataga assembly election
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்.!
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரேகட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அயாத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு புதிய வசதி ஒன்றை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதி என்னவென்றால் முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்க அனுமதிப்பது தான். இந்த வசதி முதலில் சோதனை முறையில், பெங்களூர் நகரில் அரண்மனை ரோட்டில் உள்ள அரசு ராமநாராயண் செல்லாராம் கல்லூரி வாக்குச்சாவடியில் அறை எண் 2-ல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறையில் வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்களின் செல்போனில் 'சுனாவனா' எனப்படும் தேர்தல் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அந்த செயலியில் வாக்காளர்கள் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 'ஓ.டி.பி.' எண் வரும். அந்த எண்ணை அந்த செயலியில் உள்ளீடு செய்து, வாக்காளர் தனது செல்பி புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து அந்த வாக்காளர், வாக்குச்சாவடிக்கு சென்று முகம் அடையாளம் காணும் ஸ்கேனர் கருவி முன்பு நிற்க வேண்டும்.
அதில் எடுக்கப்படும் புகைப்படம், தேர்தல் ஆணைய விவரங்களுடன் பொருந்தினால், வாக்காளர் எந்த ஆவணத்தையும் காட்டாமல் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இந்த முகம் அடையாளம் காணும் வசதியால் கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுவதுடன் வாக்காளா்களின் காலவிரயமும் தவிர்க்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
new scanner photo facility announce for karnataga assembly election