அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகள் அதிகம் இருப்பதால், சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி அமைந்துள்ள காஷ்மீர் பகுதியில் குளிர்காலத்தில் வெப்பநிலையும் குறைந்து காணப்படும். 

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்பட கூடிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடுத்தர மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது அனந்த்நாக், பந்திப்பூர், பாராமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், தோடா, கிஷ்த்வார் மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு ஆயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் ஏற்பட கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதேபோல், குறைவான ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது ரியாசி, ரஜோரி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் இரண்டாயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஏற்பட கூடும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next twenty four hours Avalanche in jammu and kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->