அதிரடி காட்டும் என்ஐஏ அதிகாரிகள் - நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை.!
NIA officers raide 50 places in india
அதிரடி காட்டும் என்ஐஏ அதிகாரிகள் - நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை.!
வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் உள்ள அவர்களது ஆதரவாளர்களுக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுக்காக ஹவாலா மூலம் நிதியுதவி செய்வதாக என்ஐஏ சந்தேகப்படுகிறது.
மேலும், இந்தியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களக்கும், ஐஎஸ்ஐக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இந்தியா முழுவதும் 50 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, பஞ்சாபில் 30 இடங்கள், ஹரியானாவில் 4 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா ஒன்று என்று மொத்தம் 50 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமன்கர், ஜுன்ஜுனு, கங்காநகர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், பஞ்சாபில் உள்ள கேடிஎஃப் பயங்கரவாதிகளான அர்ஷ் டல்லாவின் நெட்வொர்க்குடன் தொடர்புடைய பல இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஹாரி மௌர், குர்ப்ரீத் சிங் குரி மற்றும் குர்மெயில் சிங் உள்ளிட்ட பிற இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 50 இடங்களில் என்ஐஏ ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
NIA officers raide 50 places in india