பெங்களூரு குண்டு வெடிப்பு - பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை.!!
NIA probes BJP executive regards Bengaluru blasts
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் காபி உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை இடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாஜக நிர்வாகியிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இரண்டு இளைஞர்களின் வீடு செல்போன் கடைகளில் சோதனை நடத்ததின் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி பாஜக நிர்வாகி சாய் பிரசாந்திடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாந்தை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கன்னட ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
English Summary
NIA probes BJP executive regards Bengaluru blasts