உ.பி யில் சோகம் ||  கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


உ.பி யில் சோகம் ||  கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் - நொடியில் நடந்த விபரீதம்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டம் ரெதிபோட்கி கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். 

இந்த டிராக்டர் தாஜ்புரா என்ற கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அப்போது கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் அடித்து செல்லப்பட்டனர். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இது வரைக்கும் 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள். மேலும், பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, "கிராம மக்கள் கால்வாய் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என்று ஓட்டுனரை எச்சரித்ததாகவும், அதை புறக்கணித்துவிட்டு ஓட்டுநர் அந்த வழியாக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine devotees died accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->