வெளுத்து வாங்கும் வெப்ப அலை - வட மாநிலங்களில்  98 பேர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


வெளுத்து வாங்கும் வெப்ப அலை - வட மாநிலங்களில்  98 பேர் உயிரிழப்பு.!!

நாடு முழுவது சமீப நாட்களாக வெப்பம் அளவு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதிலும் மதிய வேளைகளில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அதீத வெப்ப அலை காரணமாக வட இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதாவது, உத்தரபிரதேசம் மாநிலத்தில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் என்று மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், வெப்ப அலை காரணமாக காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 

இந்த வெப்ப அலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ninety eight peoples died for heatwave in north states


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->