#Budget2024 || கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்க தடுப்பூசி.!! நிர்மலா சீதாராமனின் சூப்பர் அறிவிப்பு.!!
Nirmala announced free Cervical cancer vaccine
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இந்த உரையின் போது பெண்களுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களில் 28% பேர் உயர் கல்வி பயின்றுள்ளதாகவும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 43 சதவீதம் பெண்கள் தொழில் முனைவர்களாக உயர்ந்ததாகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் முத்தலா தடை பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு ஆகியவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது சுட்டிக்காட்டி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு தடுப்பூசி திட்டங்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக 9 முதல் 14 வயது பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
English Summary
Nirmala announced free Cervical cancer vaccine