கோமாவிற்கு சென்ற நித்யானந்தா.. பரிதவிக்கும் சீடர்கள்.!!
nithyananda coma condition
சர்ச்சைகளுக்கு பெயர் போன தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, பாலியல் வன்கொடுமையால், ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகியுள்ளார்.
கோவில் கட்ட நிதி என்று கூறி தன்னை நம்பிவந்தவர்களிடம் மோசடி செய்தும், அந்த பணத்தில் தனித் தீவு ஒன்று குத்தகை எடுத்து கைலாசா என்ற நாட்டை அறிவித்தார். இந்தியாவில் இருந்து தற்போது கைலாச நாட்டில் இருக்கும் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கடற்காற்று, இந்திய உணவு முறைகள் கிடைக்காததால் நித்தியானந்தா தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல் மெலிந்து சோர்வான நித்யானந்தருக்கு, கல்லீரல் அலர்ஜியும், சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உள்ளது. தற்போது நுரையீரல் தொற்று வரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகிறார். இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி என்பதால் நித்யானந்தாவிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தும், தனி விமானம் இருந்தும், சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளார்.
கடந்த 2 வாரமாக முற்றிலும் முடங்கி நிலையில் நித்யானந்தாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளது.. நித்தியானந்தா உடல்நிலை குறித்து அவரது சீடர்கள், சாமி நித்தியானந்தா பூரண சமாதி நிலைக்கு சென்றதால் அனைவரும் பிரார்த்தியுங்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
English Summary
nithyananda coma condition