டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி இல்லை! வதந்திக்கு மத்திய அமைச்சர் முற்றுப்புள்ளி! - Seithipunal
Seithipunal


டீசல் வாகனங்களுக்கு, மாசு உற்பத்தி வரியாக, 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஊடகங்களில் எப்படி செய்தி வெளியிடப்பட்டது என்பதை ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு இல்லை.

வரும் 2070ம் ஆண்டிற்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருள்கள் இறக்குமதிக்கு மாற்றாகவும், செலவு குறைந்ததாகவும், சுதேசி மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்" என செய்தி ஊடகங்களில் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NitinKhatari explains additional GST on diesel vehicles is rumour


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->