பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விட நான் உயிரை விடுவதே நல்லது - நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கூட்டணியில் சேர்ந்தார். 

அதன் பின்னர், 2017-ம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு பாஜக கூட்டணியை விட்டு விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் இணைந்தார். 

இந்த நிலையில், நிதிஷ்குமாருக்கு ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் தற்போது மோதல் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால், அவர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் சேருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த கேள்வி குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்டதற்கு அவர் தெரிவித்ததாவது:- "பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விட நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். கடந்த 2017-ம் ஆண்டு, லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீதான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் பாஜக கூட்டணிக்கு சென்றது மிகவும் தவறு. 

அப்போது, எனது ஆதரவாளர்களுடைய அனைத்து ஓட்டுகளையும் பாஜக பெற்று வந்தது. பாஜகவின் இந்துத்துவாத கொள்கையால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களின் சில ஓட்டுகளும் அதில் அடங்கும். 

மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள நாற்பது தொகுதிகளில் முப்பத்தாறு தொகுதிகளை கைப்பற்றப் போவதாக பாஜக கூறுவது கேலிக்கூத்தானது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitishkumar said that he would rather die than alliance with BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->