ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா - 20 எம்.பிக்களுக்கு பாஜக நோட்டீஸ்.!
notice send to 20 bjp mp for avoide parliment meeting
மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட மசோதா 2024-வை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
அதன் பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 20 பா.ஜ.க. எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
English Summary
notice send to 20 bjp mp for avoide parliment meeting