#BREAKING | அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு பறந்த நோட்டீஸ்.!!
Notice to Election Commission regarding free promises
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருப்பது அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நோட்டீஸில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் அதன் ஆட்சேபத்தை பதிவு செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி, உத்தரவாதங்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதாகவும்,
கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழலில் இந்த வழக்கு முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Notice to Election Commission regarding free promises