நவம்பர் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
November month Bank Holidays reserve Bank of India announced
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, நவம்பர் மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள்;
நவம்பர் 1 - கன்னட ராஜ்யோத்சவா/குட். பெங்களூரு மற்றும் இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 6 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 8 - குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா. இந்த நாளில் ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 11 - கனகதாச ஜெயந்தி/வாங்கல விழா. இந்த நாளில் பெங்களூரு, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 12 – இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 13 – ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 20 – ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் - ஷில்லாங் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 26 – நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 27 – ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
November month Bank Holidays reserve Bank of India announced