காதலியை கழட்டிவிட்டு காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம்; விஷ ஊசி செலுத்தி நர்ஸ் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் மிர்யாளகுடாவில் உள்ள பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்த 27 வயதுடைய மல்லீஸ்வரி என்பவர் ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த அவர் அதே கிராமத்தை சேர்ந்த ஜனா ரெட்டி என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜனா ரெட்டியின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த்துள்ளனர். அத்துடன், ஜனா ரெட்டிக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளனர்.

ஜனா ரெட்டியும் நான்கு வருடமாக, காதலித்த காதலியை கழட்டி விட்டு, பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதை உணர்ந்த மல்லீஸ்வரி, தினந்தோறும் அதனை நினைத்து பார்த்து மனமுடைந்து போயுள்ளார். விரக்தியடைந்த அவர் தனக்குத்தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மல்லீஸ்வரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜனா ரெட்டியை கைது செய்துள்ளனர். 

Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:

தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nurse commits suicide by injecting poison after boyfriend married another woman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->