மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (வயது 33). இவர், அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சாப்பிட்ட அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பிரியாணி சாப்பிடும் உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nurse death after eat mandhi biriyani in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->