பாட்னா ரெயில் நிலையம் : விளம்பர பலகையில் திடீரென ஓடிய ஆபாச வீடியோ.! ஹேக்கர்ஸ் தான் காரணமா?
obscene vedio played on advertiesment screen in patna railway station
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரெயில் நிலையத்தில் வழக்கம்போல் நேற்றிரவு, ஏராளமான பயணிகள் தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.
அப்போது, திடீரென ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையின் திரையில் ஆபாச வீடியோ ஓடியது.
இந்த வீடியோ காட்சிகள் மற்றும் அதிலிருந்து வரும் சத்தங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் முகம் சுழித்தவாறு தங்களது முகங்களைத் திருப்பிக் கொண்டனர். இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைபார்த்த, ரெயில்வே போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து ரெயில் நிலைய நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக திரை அணைக்கப்பட்டது. அதன் பின்னர், பாட்னா ரெயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, "இணையதள குற்றவாளிகள் சிலர் ஹேக்கிங் செய்து இதுபோன்ற ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றது தெரிவித்தனர்.
English Summary
obscene vedio played on advertiesment screen in patna railway station