ஒடிசா ரெயில் விபத்தால் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் - விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா ரெயில் விபத்தால் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் - விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.!!

நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாஹானாகா ரெயில் நிலையம் அருகே பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட மூன்று ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரைக்கும் 294 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இருப்பினும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் விபத்தை தொடர்ந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் நகருக்கும், அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விமான போக்குவரத்து நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த அறிவிப்புத் தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களும் தீவிரமாகக் கண்காணித்து, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புவனேஸ்வர் போல ஒடிசா மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம். 

அதேபோன்று, ரெயில் விபத்தினால் விமான பயணசீட்டு ரத்து அல்லது பயண தேதியை மாற்றி அமைத்ததற்கான அபராதம் உள்ளிட்டவை விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisa train accident not to raise flight ticket aviation ministry ask airlines


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->