உயர்மட்ட குழு ஆலோசனை! நேரடியாக களத்திற்கு வரும் பிரதமர் மோடி!
Odisa Train Accident PM Modi Direct Visit today
ஒடிசா மாநிலம், பாலசூர் மாவட்டம் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கோரமண்டல் ரயில் பெட்டி மற்றொரு டிராக்கில் விழுந்ததில், அந்த ரயில் பெட்டி மீது பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ரயில் விபத்து நடத்த இடத்திற்கு இன்று மாலை பிரதமர் மோடி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் குழு ஒடிசாவுக்கு சென்றடைந்துள்ளது. மேலும் மேற்கு வாங்க மாநில முதல்வர் மம்தாவும் நேரடியாக விபத்து நடந்த பகுதிக்கு செல்ல உள்ளார்.
English Summary
Odisa Train Accident PM Modi Direct Visit today