BigBreaking | தோல்வி எதிரொலி - ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்!
Odisha Cm Resign
நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு பல்வேறு அதிர்ச்சிகளையும், எதிர்பாராத மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
எப்போதுமே வட மாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக, இந்த முறை வடமாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
அதே சமயத்தில் தென் மாநிலங்களில் தனது வாக்கு வங்கிகையும், கணிசமான வெற்றிகளையும் குவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பாஜக தனது வாக்கு வங்கியை டபுள் டிஜிட்டிற்கு உயர்த்தி உள்ளது.
கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அபரிவிதமான வளர்ச்சி உடன், தெலுங்கானாவில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் தோல்வியடைந்த பாஜக இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதேபோல் ஒடிசா மாநிலத்திலும் பாஜக மிகப்பிரமாண்டமான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியின் ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதி உள்ளது.
மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடமும் நவீன் பட்நாயக் கொடுத்துள்ளார்.