கைதி மீது வெந்நீரை ஊற்றிய அதிகாரி: மனித உரிமை ஆணையம் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறையில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் லியோன் ஜான்சன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அடைக்கப்பட்டார். 

இவர் நேற்று காலை சிறையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது அதில் முடி கிடந்ததாக தெரிகிறது. இது குறித்து சிறை அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரி கொதிக்கும் தண்ணீரை ஜான்சனின் மீது ஊற்றியதில் படுகாயம் அடைந்த அவர் வலியில் துடித்துள்ளார். பின்னர் அவர் சிறையில் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

லியோன் மீது சிறை அதிகாரி கொதிக்கும் தண்ணீரை ஊற்றியது தொடர்பாக அவரது நண்பர் கேரள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பி.எம்.ஜி சந்திப்பில் உள்ள மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணைய செயல் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Officer poured hot water on prisoner Human Rights Commission action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->