நடுரோட்டில் பற்றி எரிந்த பைக் - பகீர் விளக்கமளித்த ஓலா நிறுவனம்.!
ola bike fire accident at mid road in maharastra
தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த மின்சார பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிகிறது.
இந்த தகவல்களால், வாகன ஓட்டிகளிடையே குழப்பமும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவனத்தின் பைக் ஒன்று, திடீரென புகை கக்கியபடி, தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் உயிர்தப்பிய நிலையில், வாகனம் மட்டும் கடுமையாக சேதமடைந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ஓலா நிறுவனம், போலி உதிரிபாகங்களை பயன்படுத்தியதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ola bike fire accident at mid road in maharastra