நடுரோட்டில் தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


புனேவில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்த நிலையில் புனேவில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பற்றியது. தற்போது ஸ்கூட்டர் பற்றி எரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

நேற்று தான் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் சார்ஜ் செய்யப்படும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டி தீப்பிடித்து தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், தற்போது புனேவில் நடுரோட்டில் நின்றிருந்த ஸ்கூட்டி தீப்பற்றி எரிந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ola electric Scooty fired in pune


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->