கழுதையில் ஓலா பைக்கை கட்டி இழுத்து சென்ற நபர்.! காரணத்தை கேட்டு அதிர்ந்த பொதுமக்கள்.!  - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நபர் ஓலா ஸ்கூட்டர் வாங்கி ஆறு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அதை கழுதையில் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓலா பைக் வாங்கியுள்ளார். வெறும் ஆறே நாளில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. எனவே அவர் சர்வீஸ் மையத்திற்கு தகவல் கொடுத்தார். 

இருப்பினும் ஓலா நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அந்த நபர் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். கழுதையை அழைத்து வந்து பைக்கை அதில் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றார். 

இதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதை கவனித்த ஓலா நிறுவனம் உடனடியாக சர்வீஸ் இன்ஜினியரை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ola is the person who tied the bike to the donkey and dragged it away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->