நடுவானில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.!!
old lady died in flight
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமான நிலையத்தில் பல விமான பயணிகள் பயணம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த விமானி உடனடியாக விமானத்தை சிக்கல்தானா என்ற விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

உடனே அந்த மூதாட்டியை மருத்துவர் குழு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதன் பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.